விஷம் குடித்து மீண்டவர் பாதாள சாக்கடை கிணற்றில் சடலமாக மீட்பு

நீலாங்கரை: விஷம் குடித்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்ட நபர், பாதாள சாக்கடை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.

பாலவாக்கம், பல்கலை நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டது. அதில், கழிவுநீர் தேங்கி இருந்தது. நேற்று, 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

நீலாங்கரை போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், அவர் பெயர் தினேஷ் என தெரிந்தது; முகவரி தெரியவில்லை.

அவரது பேன்ட் பாக்கெட்டில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற துண்டு சீட்டு இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரித்ததில், விஷம் குடித்து சிகிச்சை பெற்ற தினேஷ், மருத்துவமனையில் மனநல ஆலோசனை பெற்றுள்ளார்.

தற்கொலை எண்ணத்தை குறைக்க, மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆலோசனை பெற மருத்துவர்கள் வலியுறுத்திய நிலையில், பாதாள சாக்கடை கிணற்றில் விழுந்து, தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் கூறினர்.

Advertisement