'சைக்கிளிங்' சென்ற முதியவர் கார் மோதி உயிரிழப்பு

அண்ணா நகர்: 'சைக்கிளிங்' உடற்பயிற்சியில் ஈடுபட்ட முதியவர், கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கு அண்ணா நகர், வெல்கம் காலனியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 72; ஓய்வு பெற்ற நகராட்சி ஊழியர். இவர், தினமும் 'சைக்கிளிங்' பயிற்சி மேற்கொள்வார்.

வழக்கம்போல நேற்று காலை 6:00 மணிக்கு வெல்கம் காலனியில் இருந்து, திருமங்கலம் எஸ்டேட் சாலையை நோக்கி சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருமங்கலத்தில் இருந்து திருவல்லீஸ்வரர் நகரை நோக்கி சென்ற 'ஆடி' சொகுசு கார், கோவிந்தராஜின் சைக்கிள் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரை பறிமுதல் செய்து, விபத்தை ஏற்படுத்திய திருவான்மியூரைச் சேர்ந்த அஸ்வின், 30, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement