ஹெத்தையம்மன் கோவிலில் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம்

கோத்தகிரி: கோத்தகிரி பேரகணி ஹெத்தையம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர், முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கி, ஒரு வாரம் நடந்து வருகிறது. இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் அமைந்துள்ள பேரகணி பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஹெத்தையம்மன் மடிமனையில், நேற்று விழா நடந்தது. அதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் பங்கேற்று அம்மனுக்கு உரித்தான, 'ஒட்டி ஹணா' என்ற காணிக்கை செலுத்தி, அம்மனை வழிபட்டார்.

முன்னதாக, பக்தர்கள் மற்றும் பொது மக்கள் சார்பில், படுக சமுதாய கலாசார உடை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement