ஜாதி வாரி கணக்கெடுப்பு காங்., ஓ.பி.சி., அணி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில காங்., ஓ.பி.சி., மாநில மாநாடு மேட்டுப்பாளையம் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

மாநில ஓ.பி.சி., அணி தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். அகில இந்திய ஓ.பி.சி., தலைவர் அனில்குமார், ஜெயிந்த், செயலாளர் ஜித்தேந்திரா பாஹல், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தமிழ்நாடு ஒ.பி.சி., தலைவர் நவின், பொறுப்பாளர் ராமகிருஷ்ண யாதவ், திவ்யா, பொது செயலாளர் சிவசண்முகம், ரஹ்மான், விஜயகுமாரி, வேல்முருகன், சூசை, சரவணன், தங்கமணி, மகளிர் தலைவி நிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஓ.பி.சி.,க்கு 65 இடஒதுக்கீடு உயர்த்தி வழங்க வேண்டும். ஓ.பி.சி., மாணவர்களுக்கு பள்ளி கல்வி முதல் உயர் கல்வி வரை இலவச கல்வி வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் ஓ.பி.சி., மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மத்திய அரசு பணிகள் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். கல்வி கடன் மற்றும் சிறு தொழில் கடன் வசதிகள் எளிய முறையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement