அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடியை நாடு கடத்துவாரா? காங்., மூத்த தலைவர் பிருத்விராஜ் சர்ச்சை
புதுடில்லி: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறை பிடித்து, அமெரிக்க படைகள் நாடு கடத்திய நிலையில், ''பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிறை பிடித்து நாடு கடத்துவாரா?'' என, காங்., மூத்த தலைவர் பிருத்விராஜ் சவான், 79, கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை, அந்நாட்டின் தலைநகர் கராகஸ் நகரில் வைத்து, அமெரிக்கப் படையினர் கைது செய்து, சமீபத்தில் நாடு கடத்தினர்.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதிபர் டிரம்ப், நம் நாட்டின் மீது, சில மாதங்களுக்கு முன், 50 சதவீதம் வரி விதித்தார். இதை மேலும் அதிகரிக்கப் போவதாக சமீபத்தில் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான பிருத்விராஜ் சவான் நேற்று கூறியதாவது:
அமெரிக்காவின், 50 சதவீத வரி விதிப்பு நம் நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கும். நம் ஏற்றுமதியாளர்களுக்கு இனி லாபம் கிடைக்காது. எனவே, மாற்று சந்தைகளை தேட வேண்டும். நேரடியாக தடை விதிக்க முடியாததால், வர்த்தகத்தை நிறுத்த வரியை ஒரு கருவியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்துகிறார்.
அடுத்து என்ன நடக்கும்? வெனிசுலாவில் நடந்து போல இந்தியாவிலும் நடக்குமா? பிரதமர் மோடியை அதிபர் டிரம்ப் நாடு கடத்தி விடுவாரா? இவ்வாறு அவர் கூறினார்.
@quote@ தேச விரோத மனநிலை! ஒவ்வொரு நாளும் காங்., தரம் தாழ்ந்து வருகிறது. நம் நாட்டை வெனிசுலாவுடன் பிருத்விராஜ் சவான் ஒப்பிடுவது வெட்கக்கேடானது. தேச விரோத மனநிலையை காங்., மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் விரும்புகிறார். உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டையும் அவர் எதிர்பார்க்கிறார். - பிரதீப் பண்டாரி, செய்தி தொடர்பாளர், பா.ஜ.,quote
இந்தியா என்ன வெனிசுல மாதிரியா? மோடிஜியின் மேல் கை வைத்தால் அமெரிக்கா இருக்காது. ஆபரேஷன் சிந்தூரின் போது அமெரிக்கவை அலறவிட்டவர் நமது மோடிஜி. முதலில் சவ்வானை நாடு கடத்தவேண்டும்
இப்படியே பேசிக் கொண்டிருந்தால் உங்கள் கொள்ளை கூட்டத்தை இந்தியாவை விட்டு சட்டப்படி நாடு கடத்துவார் மோடி.
Those who could not do anything against Pakistani agents seizing Mumbai for 3 days are daring Modi govt to fight against the US for sake of Venezuela!
ஆகா எவ்வளவு உத்தமமான தலைவர்
பார்த்து ... போதைப்பொருள் கடத்தல் கேசில் இன்டர்போல் சின்னவன் & மாப்பிள்ளை வகையறாக்களை தூக்கும் போது, அதில் நகமும் சதையும் போன்ற தொடர்பூடைய, உங்கள் பட்டாயா பரமபிதாவையும் சேர்த்து தூக்கிவிட போறாங்களாம்.. சூதானமா இருங்கப்பு....
இதுபோன்ற விஷமிகளை முதலில் ........
அர்பான் நக்ஸல்களின் கேவலமான பேச்சு. டெல்லி தலைமை எதாவது எலும்பு துண்டு போடாத என்று ஏக்கம்? ஜிஹாதிகள் கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகிறது.
இந்த தேசத்து துரோகி இவனை ஏமனுக்கு நாடு கடத்த வேண்டும்
பக்கிஸ்தானில் இந்தியாவிடம் வாங்கிய அடியை டிரம்ப் அவ்ளோ சீக்கிரம் மறக்க மாட்டார்மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!