சபரிமலையில் 18 படி ஏற 10 மணி நேரம் காத்திருப்பு
சபரிமலை: சபரிமலையில் பக்தர் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 படிகளில் ஏற, பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலின் மகர விளக்கு காலம், கடந்த மாதம் 30-ம் தேதி மாலை துவங்கியது. 31 முதல் நெய்யபிஷேகம் துவங்கியது. அன்று முதல் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று காலை பம்பையில் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்கள் மலை ஏற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பம்பை மணல் பரப்பில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு படிப்படியாக மலையேற அனுமதிக்கப்பட்டனர். அதன் பின் நீலிமலை, அப்பாச்சி மேடு, மரக்கூட்டம் வழியாக சன்னிதானம் வரும் வழியில் மீண்டும் சரங்குத்தியில், 'கியூ காம்ப்ளக்ஸ்' கட்டடங்களில் தங்க வைக்கப்பட்டு, பின் சன்னிதானத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வருவதற்கு 8 முதல் 10 மணி நேரம் வரை ஆகிறது. இதற்கிடையே, 18 படிகளில் ஒரு நிமிடத்திற்கு 4,000 முதல் 4,200 பக்தர்கள் வரை ஏற்றப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், கூட்டம் அலை மோதுவதால், 18 படிகளில் ஏற, 10 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!