புதிய வரி கொள்கைகளால் ரூ.50 லட்சம் கோடி கிடைக்கும்: அமெரிக்க அதிபர் புளகாங்கிதம்

12

வாஷிங்டன்: தன் வரி கொள்கைகள் வாயிலாக அமெரிக்காவுக்கு, 50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.



கடந்தாண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை போக்க உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை மேற்கொண்டார்.


இதில் பல்வேறு நாடுகளுக்கு அதீத வரியை விதித்தார். இது உலக நாடுகள் இடையேயும்,
அமெரிக்காவுக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், டிரம்ப் இது பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை.



தான் பதவியேற்ற பின் மேற்கொள்ளப்பட்ட வரி கொள்கைகளினால், அமெரிக்காவுக்கு பெருமளவு நிதி கிடைத்துள்ளதாக சமீபத்தில் கூறினார்.


இத்தொகை தற்போது, 50 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என, டிரம்ப் தெரிவித்துள்ளார். இவ்வரி விதிப்புகளால் அமெரிக்கா முன்பை விட பொருளாதார ரீதியாகவும், தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், வலிமையானதாகவும், மரியாதைக்குரிய நாடாகவும் மாறியுள்ள தாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


இந்த மிகப்பெரிய நிதி ஆதாரத்தை பற்றி பேச அமெரிக்க ஊடகங்கள் மறுப்பதாகக் கூறி, அவற்றை போலி செய்தி ஊடகங்கள் என விமர்சித்துள்ளார்.

Advertisement