தி.மு.க.,வுடன் இருக்க கஷ்டமாக இருந்தால் தனித்து போட்டியிடலாம்: காங்.,குக்கு சீமான் யோசனை
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் அளித்த பேட்டி:
திருவண்ணாமலை உட்பட எல்லா இடங்களிலும், தீபத்தை மலை உச்சியில் ஏற்றுவதுதான் வழக்கம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், தி.மு.க., அரசு கையாண்ட முறையை, நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. இரு சமய வழிபாட்டை, பிரச்னை இன்றி மேற்கொள்ள, சமூக நல்லிணக்க குழு அமைத்து தீபம் ஏற்ற வேண்டும். இதை அப்போதே செய்து இருந்தால், பிரச்னையே வந்து இருக்காது.
கரூர் சம்பவத்தில் விஜயிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்துவது தவிர்க்க முடியாது. தங்கள் மீது எந்த தவறும் இல்லை என விசாரணையில் தெளிவுபடுத்தினால் சரியாகப் போகிறது.
விஜய், கூட்டணியை விரும்புகிறார். இதனால், தங்களுடன் வரும் கட்சிகளை சேர்த்து
கொள்கிறார். நான் கூட்டணியை விரும்பவில்லை. அதனால் கூட்டணிக்கு போகவில்லை.
தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருப்பது கஷ்டமாக இருந்தால், காங்கிரஸ் தனியாக, தேர்தலில் நிற்க வேண்டியது தானே. அவர்கள் கூடுதல் தொகுதி கேட்பதற்காக பேரம் பேசுவார்களே தவிர தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வரமாட்டார்கள்.
பொங்கலுக்கு 3000 ரூபாய் தருவதற்கு எப்படி பணம் வரும். மின் கட்டணம், சொத்து வரி, பால் விலையை உயர்த்த வேண்டியது தான் என்றார்.
சீமான் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதை காட்டுகிறது அவரது பேச்சும், செயலும், நடவடிக்கையும்.
உங்க அனாலிசிஸ் கரெக்ட். அனால் அரசியலில் முரன்பாடாக நடக்கிறார்கள். ஆர்ட் ஆப் தி பொஸ்ஸிபில் விதிமுறை கூட்டு ஆட்சி கொஞ்சம் பாலன்ஸ் தரும். நீங்களும் லெஸ்ஸர் ஏவில் செலக்ட் பண்ணுங்கள்.
ஆமாம், திமுக வின் சைலண்ட் கொத்தடிமை சொல்லிட்டாரு. சார், இட்லிக்கடை திரைப்படம் பார்த்து பாராட்டியது மாதிரி, 18 வயது பாலகன் பல நூறு கோடிகளில் தயாரித்த பராசக்தி திரைப்படம் பார்த்து பாராட்ட தயாராகி விட்டார்.மேலும்
-
கஞ்சா பெண் வியாபாரியுடன் போட்டோ எடுத்திருக்கும் அமைச்சர்; அண்ணாமலை
-
கச்சா எண்ணெய் உற்பத்தியை பெருக்க அமெரிக்கா மெகா திட்டம்!
-
குஜராத் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
-
தி.மு.க., அரசை அகற்ற சபதம் ஏற்போம்: பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேச்சு
-
விஜய் பேசாதது ஏன்?: நடிகை கஸ்துாரி கேள்வி
-
1.45 கோடி பேருக்கு பொங்கல் பரிசு பட்டுவாடா