1.45 கோடி பேருக்கு பொங்கல் பரிசு பட்டுவாடா
சென்னை: 1.45 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 4,350 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா, 3,000 ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவை அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது.
பரிசு தொகுப்பு வினியோகம், ரேஷன் கடைகளில் இம்மாதம், 8ம் தேதி துவங்கியது. இதுவரை 1.45 கோடி கார்டுதாரர்களுக்கு, 4,350 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இன்னும், 77 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement