விஜய் பேசாதது ஏன்?: நடிகை கஸ்துாரி கேள்வி

4

தர்மபுரி: ''தன் பட பிரச்னைக்கே அமைதியாக உள்ள விஜய், மக்கள் பிரச்னைக்கு எப்படி பேசுவார்,'' என, நடிகை கஸ்துாரி கூறினார்.


தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில், பா.ஜ., சார்பில் நடந்த, மோடி பொங்கல் விழாவில் பங்கேற்றவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அறநிலையத்துறை, கோவில் நிலங்களில் அரசு குறுக்கிடுவது போல், மத்திய அரசு தணிக்கை துறையில் குறுக்கிடுவதாக தி.மு.க., நினைக்கிறது.


'ஜனநாயகன்' பட விவகாரத்தில், பா.ஜ., சதி செய்வதாக காங்., - தி.மு.க.,வினர் கூறுகின்றனர். இந்த விஷம பிரசாரத்தை, தி.மு.க.,வினர்தான் எடுத்து வைக்கின்றனர். தன் பட பிரச்னைக்கே அமைதியாக உள்ள விஜய், மக்கள் பிரச்னைக்கு எப்படி பேசுவார்? த.வெ.க., நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில்லை.

தி.மு.க., அறிவித்த, 505 வாக்குறுதிகளில், 404 நிறைவேற்றப்பட்டயதாக, முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். இதற்கு முன், 99 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்றவர், அண்ணாமலை போன்றவர்கள் புள்ளி விபரத்தை கூறியதால், 80 சதவீதம் என்கிறார். இவ்வாறு கூறினார்.

Advertisement