நெரிசலில் தவிக்கும் வாகன ஓட்டிகள் பள்ளி சந்திப்பை விரிவுபடுத்த எதிர்பார்ப்பு
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி சந்திப்பில், குன்றத்துார் மார்க்கமாக செல்லும் சாலை குறுகலாக உள்ளதால், தினமும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, சந்திப்பை விரிவுபடுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி அருகே இருந்து, பிரிந்து செல்லும் சாலை வழியாக குன்றத்துார், போரூர், மணிமங்கலம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சந்திப்பு அருகே, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
அதேபோல, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் இந்த முக்கிய சந்திப்பின் இருபுறமும் உள்ள கடைகள், சாலையை ஆக்கிரமித்து உள்ளன.
இதனால், சந்திப்பில் சாலையின் அகலம் மிகவும் குறுகலாக உள்ளது. அதனால், காலை மற்றும் மாலை பீக் ஹவர்ஸ் நேரங்களில், இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி சந்திப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது