முதல் முறையாக பெட்ரோல் இன்ஜினில் வரும் 'டாடா சபாரி' எஸ்.யூ.வி.,
'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் 'சபாரி' எஸ்.யூ.வி., காரை மேம்படுத்தி, 2026 மாடலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், ஆறு மற்றும் ஏழு சீட்டர் வகையில் வருகிறது.
இதுவரை, 2 லிட்டர் டீசல் இன்ஜினில் மட்டுமே வந்த இந்த கார், முதல் முறையாக 1.5 லிட்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினில் கிடைக்கிறது.
இது, 'ஹேரியர்' 2026 மாடல் காரில் வரும் அதே இன்ஜின் ஆகும். டீசல் இன்ஜினை விட, பெட்ரோல் இன்ஜின் காரின் எடை 80 கிலோ குறைவாக உள்ளது. இரு இன்ஜின்களுக்கும், 6 - ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோ டார்க் கன்வர்ட்டர் கியர் பாக்ஸ்கள் கிடைக்கின்றன. ஆனால், 4 - வீல் டிரைவ் வழங்கவில்லை.
இப்பிரிவில், உள்ள எந்த காரிலும் கிடைக்காத 14.5 அங் குல ஒ-எல்.இ.டி., டிஸ்ப்ளே, 50க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதிகள், டேஷ்கேம், எலக்ட்ரானிக் உட்புர கண்ணாடி, டால்பி அட் மோஸ் வசதியுடன், 10 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், முன்புற மற்றும் பின்புற கேமரா வாஷர்கள், முதல் மற்றும் இரண்டாம் வரிசை வென்ட்டிலேட்டட் மற்றும் பவர்டு சீட்கள், முதல் வரிசை, பயணி சீட்டை நகர்த்த 'பாஸ் மேட்' வசதி, காற்று மற்றும் இன்ஜின் சத்த ம் கேபினுக்குள் வராமல் இருக்க மேம்பாடு என, பல அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புக்கு, 6 காற்று பைகள், அடாஸ் லெவல் - 2 வசதி, 360 டிகிரி கேமரா, ஆல் வீல் டிஸ்க் என 17க்கும் அதிகமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது