ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு கட்டுப்பாடுகள் அவசியம்
கூடலுார்: கூடலுார் தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில் நுகர்வோர் தின சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
'ஆல் தி சில்ட்ரன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் வரவேற்றார். முகாமுக்கு மையத்தின் முதல்வர் ஷாஜி தலைமை வகித்தார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் பேசுகையில், ''நாம் உணவில் நாள் ஒன்றுக்கு உப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்டவை, 5 முதல் 20 கிராம் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், குளிர்பானம், சர்க்கரை சிப்ஸ் போன்ற நொருக்கு தீனி பாக்கெட்டுகளில் இவை பத்து மடங்கு அதிகமாக உள்ளது.
இவைகளை தொடர்ந்து உண்பதன் மூலம் பல்வேறு நோய்களுக்கு ஆளாக வேண்டி உள்ளது. எனவே, உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் மூலப் பொருட்கள், அவற்றின் சத்துக்கள் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை பார்த்து பொருட்களை தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
கூடலுார் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் பேசுகையில்,''நாம் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். கலப்பட உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவு கட்டுப்பாடுகள் அவசியம்,'' என்றார்.
கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியன் பேசுகையில்,''நுகர்வோர் குறைகளை தீர்வு காண்பதற்கு இணைய வழியில் புகார் அளிக்கலாம். எனவே உணவு பொருட்கள் சார்ந்த குறைபாடுகளை புகார் அளித்து தீர்வு காணலாம்,'' என்றார். முகாமில் பயிற்சி மைய பயிற்றுனர்கள், மாணவர்கள் பங்கேற்றுனர்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது