ரூ. 8.21 லட்சம் மதிப்பிலான சமுதாய கூடம் திறப்பு
கோத்தகிரி: கோத்தகிரி ஜக்கனாரை ஊராட்சிக்கு உட்பட்ட, பனங்குடி கிராமத்தில், டி.வி.எஸ்., ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை சார்பில், 8.21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தை திறந்து வைத்து கலெக்டர் லட்சுமி பவ்யா பேசியதாவது:
இந்த அறக்கட்டளை, சுய உதவி குழு மேம்பாடு, கல்வி முன்னேற்றம், சுகாதார மேம்பாடு, பள்ளி மற்றும் அங்கன்வாடி உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் பழங்குடியினர்களுக்காக பல்வேறு உதவிகளும் செய்து வருகிறது.
அதன்படி, 8.21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பொதுமக்களில் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
மேலும், இப்பகுதியில் வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ், 17 வீடுகளுக்கு, 9.20 லட்சம் ரூபாய் மதிப்பில் பழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சுகாதார வளாகம் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்கப்படும். தவிர, 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைமட்ட நீர் தேக்க தொட்டி கட்டும் பணி நடந்து வருகிறது.
ஜென்மம் திட்டத்தின் கீழ் தலா, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், 4 வீடுகளுக்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் மற்றும் ஸ்ரீனிவாச சேவைகள் அறக்கட்டளை கள இயக்குனர் சவுரிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது