ஏற்றுமதியில் மாருதி 'நம்பர் 1'
'மாருதி சுசூகி' நிறுவனம், தொடர்ந்து ஐந்து நிதி ஆண்டுகளாக நாட்டின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில், இதுவரை காணாத அளவில், 3.95 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஏற்றுமதி வளர்ச்சி, 21 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஷிப்ட், டிசையர், எர்டிகா உட்பட 18 மாடல் கார்களை, 100க்கும் அதிமான நாடுகளுக்கு இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இந்நிறுவனத்தின் முதல் மின்சாரக்காரான இ - விட்டாரா எஸ்.யு.வி., காரை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து, அந்த சந்தைக்குள் மீண்டும் நுழைந்துள்ளது.
அதே சமயம், கடந்த நிதியாண்டில், இதுவரை காணாத அளவில் 22.55 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 20 லட்சம் கார்களுக்கும் அதிகமான கார்களை உற்பத்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில், உள்நாட்டில் 40 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது