மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. தென்கிழக்கு வங்க கடல், பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. மேற்கு வட மேற்கு திசைகளின் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இதனால் இன்று (ஜனவரி 09) முதல் கடலோர டெல்டா மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விசைப் படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜனவரி 9) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜனார்த்தனம் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த கடிதம் மாவட்டத்தில் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் பாடல்கள் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு