ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு

1


சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 07) ஆபரண தங்கம், கிராம் 12,800 ரூபாய்க்கும், சவரன் 1,02,400க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 277 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்றைய நிலவரம்



நேற்று (ஜனவரி 08), தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து, 12,750 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 400 ரூபாய் சரிவடைந்து, 1,02,000 ரூபாய்க்கு விற்பனை யானது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 272 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 5,000 ரூபாய் குறைந்து, 2.72 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (ஜனவரி 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 268 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 4 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement