அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

22

சென்னை: சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸை அவரது இல்லத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்தது என நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.


தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. இந்த பரபரப்பான சூழலில், சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள இபிஎஸ் இல்லத்தில் அவரை நயினார் நகேந்திரன் சந்தித்தார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். இந்த அரசியல் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சுமூகமாக முடிந்தது!





நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அதிமுக-பாஜ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தது. பாஜ எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை பிறகு சொல்கிறேன். பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து ஆலோசித்தோம். தேதி இன்னும் முடிவு ஆகவில்லை. பிரதமர் கூட்டம் மதுரை அல்லது சென்னையில் நடத்துவது குறித்து ஆலோசித்தேன், என்றார்.

Advertisement