ஜனவரி 9ல் 6 மாவட்டம், ஜனவரி 10ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

1

சென்னை: மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் ஜனவரி 9ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னைக்கு 1,270 கி.மீ தெற்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும்.
ஜனவரி 8ம் தேதி கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவாரூர்

* நாகை

* தஞ்சாவூர்

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

ஜனவரி 9ம் தேதி கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* தஞ்சை

* நாகை

* புதுக்கோட்டை

* ராமநாதபுரம்

ஜனவரி 10ம் தேதி

மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் (ஆரஞ்சு அலர்ட்)

* கடலூர்

* மயிலாடுதுறை

* திருவாரூர்

* நாகை

கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


* சென்னை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* அரியலூர்

* தஞ்சை

* புதுக்கோட்டை

ஜனவரி 11ம் தேதி

கனமழை (மஞ்சள் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருவள்ளூர்

* சென்னை

* ராணிப்பேட்டை

* காஞ்சிபுரம்

* செங்கல்பட்டு

* வேலூர்

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

* கடலூர்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement