அமெரிக்காவில் 3 குழந்தைகளின் தாயார் சுட்டுக்கொலை: அதிகாரிகளுக்கு எதிராக வெடித்தது போராட்டம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் மினியாபோலீசில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரிகள்(ஐசிஇ) , நேற்று( ஜன.,08) பெண் ஒருவரை சுட்டுக் கொன்றதற்கு எதிராக அங்கு பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் பெயர் ரெனீநிக்கோல் குட்(37) என தெரியவந்துள்ளது. அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கொலராடோவில் பிறந்த அவர் கடந்த ஆண்டுதான் மினிசோட்டாநகரில் குடிபெயர்ந்தார். அவரது கணவர் ராணுவ வீரராக பணியாற்றயவர். அவர் உயிரிழந்த பிறகு தனது பெற்றோருடன் ரெனீ நிக்கோல் குட் வாழ்ந்து வந்தார்.
தற்காப்புக்காக சுட்டதில் அந்த பெண் உயிரிழந்தார் என டிரம்ப் நிர்வாகம் சொன்னாலும் உள்ளூர் மக்கள் அதனை ஏற்கவில்லை. சுடப்பட்ட பெண் கலவரக்காரர் என்றும் அதிகாரிகளை வாகனத்தில் மோத முயன்றதாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்தப் பெண்ணை சுட்டுக்கொன்றது ஐசிஇ அமைப்பைச் சேர்ந்த ஜோனாத்தன் ரோஸ் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், கொல்லப்பட்ட பெண் காரில் அமர்ந்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும் அந்தக்காரை நோக்கி 3 அதிகாரிகள் சென்றனர். அப்போது ஒருவர் காரில் இருந்து இறங்குமாறு உத்தரவிடுகிறார். மற்றொரு அதிகாரி காரின் கதவை திறக்க முயலும் போது, கார் பின்னோக்கி சென்றது. சிறிது தூரம் சென்று முன்னாள் வந்தது. மற்றொர அதிகாரி, அந்த பெண்ணை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அந்தப் பெண்சம்பவ இடத்தில் உயிரிழந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டது குறித்து நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து எப்பிஐ அமைப்பினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிக்கோல் குட் கொல்லப்பட்டதற்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டம் வெடித்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக டிரம்ப் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ள நிலையில், தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நகரில் லேசான மழை பெய்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் போராட்டம் நடந்து வருகிறது. துப்பாக்கிச்சூடுநடந்த இடத்திலும் போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கலைக்க முயன்றதால்,அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
இந்நிலையில், போர்ட்லாண்ட் பகுதியில் எல்லை ரோந்து அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கணவன் மனைவி காயமடைந்துள்ளனர். இவர்கள் வெனிசுலாவை சேர்ந்த கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: இறக்கம் தொடர்வதற்கு வாய்ப்புள்ளது
-
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்ட 4 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
-
புதிய உச்சம் தொட்ட எஸ்.ஐ.பி., முதலீடு: தங்க இ.டி.எப்., முதலீடும் அதிக வளர்ச்சி
-
பங்குச்சந்தை புரோக்கர்களுக்கு குட் நியூஸ்: தொழில்நுட்ப கோளாறு விதிகள் மாற்றம்
-
கிரெடிட் கார்டில் செலவு நவம்பரில் 11.50% அதிகரிப்பு
-
உபா., சட்ட கைதிக்கு ஆதரவு; நியூயார்க் மேயர் மம்தானிக்கு இந்தியா கண்டனம்