அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் முதல்வருக்கு தெரியவில்லை: அண்ணாமலை

10


சென்னை: '' திமுக ஆட்சியில் , தனது அரசு எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றியது என முதல்வருக்கு தெரியவில்லை,'' என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிஉள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. யார் எதை எழுதிக் கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.


கடந்த 2023 செப்டம்பரில், 99% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம், அது 72% ஆனது. இன்று, 80% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம் எனக் கூறுகிறார். இது முழுக்க முழுக்க, மக்களை ஏமாற்றும் நாடகம். போலியான வாக்குறுதிகளால் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற திமுகவின் கனவு, ஒருபோதும் பலிக்காது. இவ்வறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.



@twitter@https://x.com/annamalai_k/status/2009567940526686410twitter

Advertisement