ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பேர் பலி

1

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பயணிகள்14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.


மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். குப்வியிலிருந்து சிம்லா நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது பஸ் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.


பள்ளத்தாக்கில் இருந்து பயணிகளை மீட்க, மீட்புப் படையினருக்கு உள்ளூர் மக்களும் உதவிகரமாக இருந்தனர். இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement