வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை * 74 பந்தில் 127 ரன் விளாசினார்
பெனோனி: யூத் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இளம் கேப்டன் என உலக சாதனை படைத்தார் வைபவ். ஒருநாள் தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என தொடரை வென்று, கோப்பை கைப்பற்றியது.
தென் ஆப்ரிக்க சென்ற இளம் இந்திய அணி, மூன்று போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் இரு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என தொடரை வென்றது. மூன்றாவது, கடைசி போட்டி நேற்று மீண்டும் பெனோனியில் நடந்தது. 'டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்கா, பீல்டிங் தேர்வு செய்தது.
சிக்சர் மழை
இந்திய அணிக்கு கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் ஜோடி மின்னல் வேகத்தில் துவக்கம் தந்தது. மைக்கேல் வீசிய 7வது ஓவரில் முதல் 4 பந்தில் 4, 6, 4, 6, என, வைபவ் பவுண்டரி, சிக்சராக மாறி மாறி விளாச, 21 ரன் கிடைத்தன. இவருக்கு 'கம்பெனி' கொடுத்த ஆரோன், பவுண்டரிகளாக அடிக்க, இந்திய அணி 10 ஓவரில் 111/0 ரன் குவித்தது.
ஜேம்ஸ் பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர்களாக விளாசி மிரட்டிய வைபவ், 63 பந்தில் சதம் எட்டினார். இதையடுத்து, யூத் ஒருநாள் அரங்கில் சதம் அடித்த இளம் கேப்டன் ஆனார் வைபவ் (14 ஆண்டு, 286 நாள்).
இந்திய அணி 25 ஓவரில் 226/0 ரன் எடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 227 ரன் (25.3 ஓவர்) சேர்த்த போது, வைபவ் (127 ரன், 74 பந்து, 10x6, 9x4) அவுட்டானார்.
ஆரோன் அபாரம்
ஆரோன் 91 பந்தில் சதம் எட்டினார். இவர் 118 ரன்னில் (106 பந்து) அவுட்டானார். அடுத்து வந்த வேதாந்த் 34 ரன் எடுத்து திரும்பினார்.
ஹர்வன்ஷ் 2, அபிக்ஞான் 21, கனிஷ்க் 10, அம்ப்ரிஸ் 8 என அடுத்தடுத்து அவுட்டாக, அணியின் ரன் வேகம் குறைந்தது. இந்திய அணி 50 ஓவரில் 393/7 ரன் குவித்தது. முகமது (28), ஹெனில் (19) அவுட்டாகாமல் இருந்தனர்.
சரிந்த 'டாப்'
இமாலய இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணியை 'டாப் ஆர்டர்' கைவிட்டது. ஜோரிச் (1), அத்னான் (9) ஜோடி துவக்கத்தில் நிலைக்கவில்லை. கேப்டன் புல்புலியா (4), ஜேசன் (19) ஏமாற்றினர். டேனியல் (40), ஜேம்ஸ் (41) ஆறுதல் தந்தனர். தென் ஆப்ரிக்க அணி 35 ஓவரில் 160 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 233 ரன்னில் வெற்றி பெற்றது.
ஆட்டநாயகன், தொடர் நாயகனாக வைபவ் தேர்வு செய்யப்பட்டார்.
14 வயதில்...
இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் வைபவ். 14 வயதான இவர், கடந்த 2025, பிரிமியர் தொடரில் 38 பந்தில் 101 ரன் விளாசினார். தொடர்ந்து இதுவரை 'டி-20'ல் 3 (101, 144, 108), யூத் ஒருநாள் அரங்கில் 3 (143, 171, 127), 'லிஸ்ட் ஏ' போட்டியில் 1 (190), யூத் டெஸ்டில் 2 (133, 108) என மொத்தம் 9 சதம் விளாசியுள்ளார்.
* 19 வயதுக்கு உட்பட்ட போட்டிகளில், இந்தியா, எமிரேட்ஸ், கத்தார், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, தற்போது தென் ஆப்ரிக்கா என 6 வெவ்வேறு மண்ணில் சதம் விளாசியுள்ளார் வைபவ்.
இளம் கேப்டன்
யூத் ஒருநாள் அரங்கில், கேப்டனாக களமிறங்கி, 15 வயதுக்குள் சதம் அடித்த முதல் வீரர் ஆனார் வைபவ் (14 ஆண்டு, 286 நாள்).
* இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக 'லிஸ்ட் ஏ' அரங்கில் சதம் அடித்த முதல் அதிகாரப்பூர்வ கேப்டன் வைபவ்.
227 ரன்
யூத் ஒருநாள் அரங்கில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன் சேர்த்த ஜோடி என வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ் (227 ரன்) சாதனை படைத்தனர். முன்னதாக இந்தியாவின் அன்குஷ்-அகில் ஜோடி 2013ல் 218 ரன் சேர்த்து இருந்தது.
விரைவில் இந்தியா அணிக்குள் வரவேண்டும்
வைபவ் சூர்யவன்ஷி விரைவில் இந்திய அணிக்குள் சேர்க்கப்பட வேண்டும்.மேலும்
-
செம்பரம்பாக்கம் ஏரி மீன் கிலோ ரூ.250க்கு விற்பனை
-
சிப்காட் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு 5 வது நாளாக கருப்புக்கொடி போராட்டம்
-
மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் தீவிரம்! ஜன.16ல் துணை முதல்வர், ஜன.17ல் முதல்வர் வருகை
-
வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை
-
கோ-கோ போட்டியில் பள்ளி அணி வெற்றி
-
குருவாயூரப்பன் ஐம்பொன் சிலை சங்கரமடத்திற்கு காணிக்கை