கோ-கோ போட்டியில் பள்ளி அணி வெற்றி 

சிதம்பரம்: கோ-கோ போட்டியில் வெற்றி பெற்ற சிதம்பரம் குருஞானசம்பந்தர் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

சிதம்பரம் அண்ணாமலை நகர், இராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில், கோ-கோ போட்டி நடைபெற்றது. இதில் ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் பள்ளிஅணி மாணவிகள் பங்கேற்று விளையாடினர். அதில், மூன்றாம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் பழனி வாழ்த்தி பரிசுகள் வழங்கினர். அதனையடுத்து பள்ளியில் நடந்த, பாராட்டு விழாவில், பள்ளி முதல்வர் ஜெயக்குமார் தலைமையில் தாங்கினார். துணை முதல்வர் இராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

பொருளாளர் தர்பாரண்யன், நிர்வாக குழு உறுப்பினர் சிவானந்தவள்ளி ஆகியோர் மாணவிகளை வாழ்த்தி பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர்கள் மணிகண்டன், பானுஸ்ரீ ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement