செம்பரம்பாக்கம் ஏரி மீன் கிலோ ரூ.250க்கு விற்பனை
குன்றத்துார்: செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகம் பிடிபடும் கோல்வாசி மீன், கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3,600 ஏக்கர் பரப்பளவில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எல்லையில் பரந்து விரிந்துள்ளது.
இந்த ஏரியில் ஜிலேப்பி, கெண்டை, விரால் உள்ளிட்ட மீன்கள் அதிகம்உள்ளன. இவற்றை உள்ளூர் மீனவர்கள் வலை விரித்து பிடித்து விற்கின்றனர்.
இந்நிலையில், குளிர் காலத்தில் மட்டும் கிடைக்கும் அரிய வகையாக கோல்வாசி மீன், சில நாட்களாக செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகம் பிடிபடுகிறது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
கோல்வாசி மீன் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும் கிடைக்கும்; மற்ற காலங்களில் இருக்காது. பல ஏரிகளில் இந்த மீன் இனம் அழிந்து விட்டது.
செம்பரம்பாக்கம் ஏரியில் பிடிக்கப்படும் கோல்வாசி மீனை கிலோ, 250 ரூபாய்க்கு விற்கிறோம். இந்த மீனில் முள் குறைவு, சுவை, சத்து அதிகம் என்பதால், பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இதேபோல, செம்பரம்பாக்கம் ஏரியில் பிடிபடும் ஜிலேப்பி மீன், கிலோ 100 ரூபாய்; கட்லா கெண்டை மீன் 200 ரூபாய்; ஏரி வவ்வால் மீன் 250 ரூபாய்க்கும் விற்கிறோம்.
தினமும் இந்த மீனை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்