வல்லக்கோட்டை கோவிலுக்கு மயில்வாகனம் நன்கொடை

காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

வல்லக்கோட்டையில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவிலுக்கு, சென்னையைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 400 கிலோ எடையுள்ள வேங்கை மரத்திலான மயில் வாகனத்தை நன்கொடையாக கோவில் செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் வழங்கி உள்ளார்.

மயில் வாகனம், விழாக்காலங்களில் புறப்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement