தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் உறவினர் உட்பட 2 பேர் கைது: மடிக்கணினிகள் திருட்டு
பெங்களூரு: பெங்களூரில் உள்ள தங்கும் விடுதிகளில், மடிக்கணினிகள் திருடிய வழக்கில், தமிழகத்தின் சங்கராபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியன் உறவினர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்க ளூரு எலக்ட்ரானிக் சிட்டி தொட்டதோகூரில் உள்ள, 'பேயிங் கெஸ்ட்' எனும் பி.ஜி., விடுதிக்குள், கடந்த டிச., 1ம் தேதி புகுந்த மர்ம நபர், ஒரு அறைக்குள் நுழைந்து, 'சார்ஜ்' போடப்பட்டு இருந்த மடி க்கணினியை திருடி சென்றார்.
பி .ஜி., நிர்வாகிகள் அளித்த புகாரின்படி, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், டிச., 11ம் தேதி, தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜதுரை, 33, என்பவரை கை து செய்தனர்.
இவ ரிடம் நடத்திய விசாரணையில், இதற்கு முன்பும் பல பி.ஜி.,க்களில் புகுந்து, மடிக்கணினிகளை திருடியது தெரிந்தது.
திருடிய மடிக்கணினிகளை, தன் நண்பரான கணினி அறிவியல் பொறியியல் பட்டதாரி கவுதம், 30, என்பவரிடம் கொடுத்ததும், மடிக்கணினியில் உள்ள பழுதுகளை அவர் சரி செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும், அதில் கிடைத்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்ததும் தெரிந் தது.
இதையடுத்து, டிச., 19ம் தேதி கவுதமை கைது செய்ய, சங்கராபுரத்திற்கு, எலக்ட்ரானிக் சிட்டி போலீசார் சென்றனர்.
க வுதம், சங்கராபுரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயசூரியனின் உறவினர் என்பதால், அவரை கைது செய்ய, உள்ளூர் போலீசார் உதவி செய்ய மறுத்துள்ளனர். இதை, பெங்களூரு உயர் போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கு, எலக்ட்ரானிக் சிட்டி டி.சி., நாராயணா கொண்டு சென்றார்.
அவர்கள், தமிழக போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசியதை அடுத்து, அடுத்த சில நாட்களில் உள்ளூர் போலீசார் உதவியுடன், கவுதம் கைது செய்யப்பட்டார். கைதான இருவரிடம் இருந்து, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 48 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்ட ன.
துபாயில் வேலை செய்த கவுதம், மூன்று ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். பின், துபாய் செல்லாமல் இங்கேயே வசித்து, திருட்டில் ஈடுபட்டுள்ளார். இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், நேற்று இத்தகவல்களை தெரிவித்தார்.
உதய சூரியன்.....பெயர் சொன்னால் போதும்..தரம் எளிதில் விளங்கும்... என்ன ஒன்று...திருடி மாட்டிக் கொண்டது தான்.. கட்சி பாரம்பரியத்துக்கே கேவலம்..
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பார்கள் ..... புரிந்து கொள்ளுங்கள் .....
உதயசூரியன்ன்னாலே திருட்டு உருட்டு புரட்டு தான் ...
பக்கத்து மாநிலங்களுக்கு மணல் கடத்தல், அரிசி கடத்தல். திமுக மாபியா. கிட்னி திருட்டு. ... பணம் சம்பாதிப்பது. இதெல்லாம் காலம் காலமாக நடந்து வருகிறது. திமுக நாட்டை பிடித்த பீ.டை.
இண்டி கூட்டணி
சுதந்திரம் வாங்கியபொழுது தீம்க்கா உறுப்பினராக இருந்தவருக்கு இன்னும் தீம்க்காதான் கதி என்று இல்லை. அதிலும் வளைகுடா நாடு அனுபவமுள்ள ஆள், ஆகவே சாதாரண மடிக்கணனி திருட்டெல்லாம் செய்யும் அளவுக்கு தீம்க்கா ஆள் போகமாட்டான் - துக்கத்தில் இருக்கும் உடன்பிறப்புகள். ஆனால் நல்லவேளையாக வளைகுடா நாட்டில் மடிக்கணனி திருடி சிக்கியிருந்தால் கை, கால் அல்லது கழுத்தை கூட இழந்திருக்க வாய்ப்பு இருந்தது..
டாப் டூ பாட்டம் ஒட்டு மொத்தக் கூட்டமும் திருட்டு மொன்னமாரிக் கூட்டம்தான்.
கூட்டணி கட்சி திருடனைப் பிடிப்பது கூட்டணி தர்மமா? நாங்க அந்த காலத்துலே டில்லியிலேயே கூட்டணி தர்மத்தை நிலை நாட்டினவங்களாச்சே?
திமுக MLA வின் வேலைக்கு உதவி உள்ளார். இதை கூட செய்யவில்லை என்றால் திமுகவில் இருந்து என்ன பயன்.
பேஷ் பேஷ் அப்புடிதான் இருக்கணும் ..இல்லன்னா எப்படி / பேர் கெட்டுபோகும்ல?