மதுரைக்கு 67 புதிய  பஸ்கள்

மதுரை: மதுரை எல்லீஸ்நகர் ரோட்டில் அரசு போக்குவரத்துக் கழகம் பொன்மேனி கிளையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிபொருள் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் சிவசங்கர், தியாகராஜன், மூர்த்தி திறந்து வைத்தனர்.

67 புதிய புறநகர் பஸ்களையும் துவங்கி வைத்தனர். கலெக்டர் பிரவீன்குமார், எம்.எல்.ஏ., க்கள் தளபதி, பூமிநாதன், துணை மேயர் நாகராஜன், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் சரவணன், பாரத் பெட்ரோலியம் விற்பனை மேலாளர் ஸ்ரீகாந்த் பங்கேற்றனர்.

Advertisement