அரசு கலை கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பில், பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்-தது. கல்லுாரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். பாலின உளவியல் குழு ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயனி வர-வேற்றார். அண்ணாமலை பல்கலை முன்னாள் உளவியல் துறை தலைவர் மற்றும் யோகா இயக்குனர் சுரேஷ் பங்கேற்றார்.


அவர், கல்லுாரி மாணவர்களுக்கு பாலியல் உளவியல் குறித்த விழிப்புணர்வு, சமூகத்தில் பாலினத்தின் பங்கு, குடும்பம் மற்றும் கலாசார மதிப்பீடு, பாலின சமத்துவமின்மைக்கான காரணங்களை ஆய்வு செய்வதின் அவசியம் குறித்து பேசினார். இதில், மாண-வர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பெரும்பாலானோர் பங்கேற்றனர்.

Advertisement