நல்லாட்டூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சவுக்கு மரங்கள் தீயில் கருகின
திருத்தணி: நல்லாட்டூரில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சவுக்கு மரங்கள் தீயில் கருகின.
திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் முருகப்பநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கமலநாதன், 50. இவருக்கு அதே பகுதியில், 15 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சவுக்கு பயிரிட்டிருந்தார்.
தற்போது, சவுக்கு தோப்பில் மரங்கள் வளர்ந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு சவுக்கு தோப்பில் சென்ற மின் ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் கமலாநாதனின் சவுக்கு மரங்கள் எரிய தொடங்கின.
இந்த தீ வேகமாக பரவி, அருகே உள்ள பானுநாயுடு மற்றும் லோகநாதன் ஆகிய இரு விவசாயிகளின் சவுக்கு தோப்பிற்கும் பரவியது. அந்த சவுக்கு மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இதையடுத்து நல்லாட்டூர் கிராம மக்கள் சேர்ந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் மூன்று விவசாயிகளின், 7 ஏக்கரில் பயிரிப்பட்டுள்ள சவுக்கு மரங்கள் தீயில் கருகின.
இதன் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
சினிமா வாய்ப்பு குறைந்து போனது; ஏ.ஆர்.ரஹ்மான் கூறிய காரணத்தால் சர்ச்சை!
-
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு; 19 காளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்