பழவேற்காடு பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை
பழவேற்காடு: பழவேற்காடு பாலத்தின் இணைப்பு சாலை பகுதிகள் சேதம் அடைந்து பராமரிமிப்பு இன்றி இருப்பதை சீரமைக்க வேண்டுமென, மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழவேற்காடு ஏரியின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தை, 13 கடலோர மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்துகின்றனர். மீனவ மக்களின் பிரதான போக்குவரத்து பாலமாக இருக்கும் நிலையில், இது உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் செடிகள் வளர்ந்து உள்ளன.
இணைப்பு சாலை பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டும், முள்செடிகள் வளர்ந்தும் இருக்கின்றன. பாலத்தின் மீது மண் குவிந்து, புழுதி பறக்கிறது.
பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையின் பயனாக அமைந்த, இந்த பாலம் பராமரிப்பு இன்றி கிடப்பது மீனவ மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
சம்பந்தப்பட்ட துறையினர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு