நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை 

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சி பகுதியில் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

பண்ருட்டி நகராட்சி கவுன்சிலர்களின் இயல்புக்கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கமிஷ்னர் காஞ்சனா, உதவி பொறியாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ராமதாஸ்(சுயே) : ரூ.77 லட்சம் செலவில், தற்காலிக பஸ்நிலையம் அமைக்க, தீர்மானித்துள்ளனர். அந்த நிதியை வீணாக்காமல் மாற்று பணிக்கு செய்திடலாம்.

சண்முகவள்ளிபழனி(தி.மு.க.) : கட்டட கழிவுகளை சாலையில் கொட்டுகின்றனர். அது, அகற்றப்படுவதில்லை.

சாலையில் பல ஆண்டுகளாக பழைய வீணான பைக் உள்ளிட்டவை நிறுத்தி வைக்கின்றனர். இதற்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்து சுத்தம், சுகாதாரமாக வைத்திருக்க அறிவுரை வழங்க வேண்டும்.

சோழன்(தி.மு.க.) :

எனது வார்டில் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். மேம்பால சர்வீஸ் சாலை, மேம்பாலத்தின் மீதும் ஆட்டோக்கள் அனுமதியின்றி நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

சேர்மன் : தற்காலிக பஸ்நிலைய அமைக்கும் பணிகளால், அப்பகுதி சுத்தம், சுகாதாரம் அடையும். தற்போது, நடந்து வரும் பஸ்நிலைய பணிகள் முழுமை பெறும். சாலையில் அசுத்தப்படுத்துபவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.

இவ்வாறு கூட்டத்தில் பேசினர்.

Advertisement