பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல் 

சிறுபாக்கம்: சிறுபாக்கம் அருகே ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

சிறுபாக்கம் அடுத்த கழுதுார் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி, ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கினார்.

அதில், ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன், 3 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியக்கோடி, கூட்டுறவு துணைப்பதிவாளர் சபிதா, மங்களூர் தி.மு.க., ஒன்றிய செயலர் சின்னசாமி, தி.மு.க., நிர்வாகிகள் நிர்மல் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement