வெடி வைத்து மீன் பிடித்த 3 பேர் கைது ஜெலட்டின், டெட்டனேட்டர் பறிமுதல்
ப.வேலுார்: ப.வேலுார் காவிரி ஆற்றில் வெடி வைத்து மீன்பிடித்த, 3 பேரை கைது செய்த போலீசார், அனுமதியின்றி வைத்திருந்த, ஜெலட்டின், டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் வெடிபோட்டு தினந்தோறும் மர்ம நபர்கள் மீன்பி-டித்து வந்தனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு, ஐந்து பேர் கொண்ட கும்பல், அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் வெடி-போட்டு மீன் பிடிப்பதாக, ப.வேலுார் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அப்-போது, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த, 5 பேர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில், 3 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள், பொய்யேரியை சேர்ந்த சங்கர், 34, நன்செய் இடையாறை சேர்ந்த பூபாலன், 32, பொத்தனுாரை சேர்ந்த ராமச்சந்திரன், 50, என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், ப.வேலுார் அருகே, ஊஞ்சபாளையம், பனங்காட்டு பகுதியில் உள்ள தனியார் கல்கு-வாரி
யில் இருந்து வெடிகளை வாங்கி, ஆற்றில் வீசி மீன்பிடித்ததாக தெரிவித்தனர். பின், கல்குவாரிக்கு சென்ற போலீசார், அங்கு அனுமதியின்றி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள், டெட்ட-னேட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மீன் பிடிக்க வெடிகளை விற்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வரு-கின்றனர்.
மேலும்
-
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை
-
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
-
பழவேற்காடு பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை
-
விழிப்புணர்வு கருத்தரங்கம்
-
நல்லாட்டூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சவுக்கு மரங்கள் தீயில் கருகின
-
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் பிறந்த நாள்