வேளாண் கல்லுாரி மாணவர்கள் கிராமப்புற அனுபவ பயிற்சி

எலச்சிபாளையம்: நாமக்கல்லில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், எலச்சிபாளையம் வட்டாரத்தில் கிராமப்புற அனு-பவ பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.


அதன்படி, எலச்சிபாளையம் வேளாண் துணை இயக்குனர் ஜெயமாலா, வேளாண்மை அலுவலர் அனிதா, உதவி வேளாண் அலுவலர் வெற்றிவேல் ஆகியோர் வழிகாட்டுதல்படி, நேற்று, கொன்னையார் கிராமத்திலுள்ள விவசாயி தங்கராசுவை சந்தித்து, எஸ்.டயிள்யூ.ஏ.எம்., திட்டம் மூலம் மானியத்தில் ரொட்ட-வேட்டர் வாங்கியது தெடர்பான தகவல்களை கேட்டறிந்து
கொண்டனர்.
எஸ்.டயிள்யூ.ஏ.எம்., என்பது, மத்திய அரசின் வேளாண் இயந்-திர மயமாக்கல் துணை திட்டமாகும். இது விவசாயிகளுக்கு டிராக்-டர்கள், அறுவடை இயந்திரங்கள் போன்ற விவசாய கருவிகளை மானிய விலையில் வாங்கவும், வாடகை மையங்கள் அமைக்-கவும் உதவுகிறது.
மேலும், விவசாய இயந்திரங்களை பயன்படுத்துவதை ஊக்கு-வித்து விவசாய உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இத்திட்-டத்தின் கீழ் விவசாயிகள் நேரடியாக மானியத்தை பெறலாம். மேலும், டிராக்டர்கள் போன்ற
வற்றுக்கு, 50 சதவீதம் வரை மானியம் கிடைக்கும் என்பதை கேட்டறிந்தனர்.

Advertisement