வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து
நெய்வேலி: நெய்வேலி வழக்கறிஞர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 20 ல் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட் செயல்பட்டு வருகிறது. நெய்வேலி வழக்கறிஞர் சங்கத்தின் 2026 ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன்படி, சங்கத் தலைவராக கலைமணி, செயலாளராக லட்சபூபதி, பொருளாளராக அமுல்ராஜ் மற்றும் இதர பொறுப்புகளின் நிர்வாகிகள் உட்பட அனைவரும் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர்.
வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் அனைவரும் நேற்று சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். கூடுதல் அரசு வழக்கறிஞர் சிலம்பரசன் மற்றும் வழக்கறிஞர்கள் சம்பத்குமார், பிரியதர்ஷன் உட்பட பலரும் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
Advertisement
Advertisement