துாண்கள் இடிந்த குடிநீர் தொட்டி அகற்றப்படுமா

‍எருமப்பட்டி: ரெட்டிப்பட்டி, கங்கா நகர் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள துாண்கள் இடிந்த குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சமடைந்-துள்ளனர்.


நாமக்கல், ரெட்டிப்பட்டி கங்கா நகரில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து, 500க்கும் மேற்பட்ட குடியிருப்புக-ளுக்கு, தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டியின், 4 துாண்களும், கடந்த, இரண்டு ஆண்டாக சிறிது சிறிதாக உடைந்து, உறுதி தன்மையை இழந்து வருகிறது.
மேலும், துாண்கள் சேதமான இந்த குடிநீர் தொட்டியில், தினமும் குடிநீர் ஏற்றும்போதும், அருகில் குடியிருக்கும், 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் பயத்துடனே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இதனால், இந்த குடிநீர் தொட்-டியில் தண்ணீர் ஏற்றுவதை நிறுத்தி, விபத்து நடக்கும் முன் உடன-டியாக இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement