எள் பயிரில் அதிக லாபம் வேளாண் துறை விளக்கம்

‍எருமப்பட்டி: வரகூர் கிராமத்தில், வேளாண்மை துறை மூலம் எள் பயிரில் அதிக லாபம் எடுப்பது குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்-டது.


எருமப்பட்டி யூனியன் பகுதியில், நெல்,‍ சின்ன வெங்காயம், எள் உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு கல்லுாரிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் தங்கி வேளாண்மை குறித்த களப்பயிற்சி மேற்-கொண்டு வருகின்றனர். இதேபோல், கடந்த, 5ல் இருந்து வரகூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மூலம் மத்திய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எள் பயிர் வளர்ச்சி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதில், எள் பயிரிட்-டுள்ள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உயிர் உரம், உயிரியல் கட்-டுப்பாடு பேன்ற இடு பொருட்களை பயன்படுத்தும் முறை குறித்தும், எள் பயிரில் அதிக மகசூல் பெற தொழில் நுட்பங்கள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி மற்றும் வேளாண்மை கல்லுாரி மாணவ, மாணவியர், செயல் விளக்கம் செய்து காட்டினர். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Advertisement