தடையை மீறி ஆர்ப்பாட்டம் ஹிந்து முன்னணியினர் கைது

மேட்டுப்பாளையம்: -: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தை, கைது செய்ததை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த, 62 ஹிந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர் அருகே, முருகன் கோயில் இடித்த இடத்தை பார்வையிட, ஹிந்து முன்னணி மாநில தலைவர், காடேஸ்வரா சுப்பிரமணியம் சென்றார். இவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரின் இந்த நடவடிக்கையையும், தமிழக அரசையும் கண்டித்து, மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஹிந்து முன்னணியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்தனர். கோவை கோட்ட செயலாளர் ராஜ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் போலீசையும், தமிழக அரசையும் கண்டித்து, கோஷம் போட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததால், போலீசார் ஹிந்து முன்னணியினரை கைது செய்தனர். இரண்டு பெண்கள் உட்பட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement