காமராஜர் அரசு கல்லுாரியில் கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி

திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த கலித்தீர்த்தாள்குப்பம்காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில்என்.சி.சி., தரைப்படை பிரிவு சார்பில்,கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்தது.

லாஸ்பேட்டையில் உள்ள என்.சி.சி., தலைமையக குரூப் கமாண்டர்கர்னல் மொஹந்தி உத்தரவின் பேரில், நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரியின் என்.சி.சி., தரைப்படை பிரிவு அலுவலர்லெப்டினன்ட் கதிர்வேல் வரவேற்றார். கல்லுாரியின் முதல்வர் கனகவேல் தலைமை தாங்கி, கொடிநாள் நிதி திரட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் என்.சி.சி., சுபேதார் அசோக், அவில்தார் அம்பலவாணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்ந்த என்.சி.சி., மாணவ, மாணவிகள் மதகடிப்பட்டு கடை வீதி மற்றும் சுற்றுப்புறகிராமங்களில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நிதி திரட்டினர்.

Advertisement