ஊட்டி அருகே 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; 32 பேர் காயம்

1

ஊட்டி: ஊட்டி அருகே நடந்த மினி பஸ் விபத்தில், காயமடைந்த 32 பேருக்கு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இருந்து நேற்று மதியம் 1:20 மணிக்கு தங்காடு கிராமத்திற்கு பயணியருடன் மினி பஸ் புறப் பட்டது. தங்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் பன்னீர்செல்வம், 45, அந்த மினி பஸ்சை ஓட்டினார்.

இந்நிலையில், எம்.பாலாடா - மணிஹட்டி இடையே மணலாடா பகுதியில் மினி பஸ் சென்றபோது, வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பயணம் செய்த அனைவரும் காயம் அடைந்தனர்.

அப்பகுதியினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து எமரால்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement