முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

1



மால்டா: மேற்கு வங்கத்தில், ஹவுரா -குவஹாத்தி இடையே நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

பல்வேறு நலத்திட்டங்களுககு அடிக்கல் நாட்டவும், முடிவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், மேற்கு வங்கம், அசாம் மாநிலத்திற்கு இன்று முதல் 2 நாள் சுற்றுப்பயணத்தை பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.

முதற்கட்டமாக, மேற்கு வங்கம் மாநிலத்தின் மால்டா பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஹவுரா முதல் அசாமின் கவுகாத்தி வரையிலான நாட்டின் முதலாவது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார். முன்னதாக, ரயிலில் ஏறி ஆய்வு செய்த அவர், ரயில் பைலட்டுகள் மற்றும் பயணிகளிடம் கலந்து உரையாடினார்.

தொடர்ந்து, 3,250 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில், சாலை உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களையும் துவக்கி வைத்தார். மேலும், நியூ ஜல்பைகுரி - நாகர்கோயில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், நியூ ஜல்பைகுரி - திருச்சி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


திருச்சி, நெல்லைக்கு இயக்கப்படும் ரயில்களின் விபரம்






நியூ ஜல்பைகுரி - நாகர்கோவில் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20603/20604)


ரயில் எண் 20603: நியூ ஜல்பைகுரியிலிருந்து புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும்.

மறுமார்க்கம் (ரயில் எண் 20604): நாகர்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நியூ ஜல்பைகுரியை அடையும்.

நியூ ஜல்பாய்குரி - திருச்சி அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20609/20610)


ரயில் எண் 20609: நியூ ஜல்பைகுரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணிக்கு திருச்சியை அடையும்.

மறுமார்க்கம் (ரயில் எண் 20610): திருச்சியிலிருந்து புதன்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நியூ ஜல்பைகுரியை அடையும்.

Advertisement