மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
சென்னை: மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: பிரதமர் மோடி வரும் 23ம் தேதி தமிழகம் வர இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடியின் வருகை, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை உறுதி செய்யும். திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக இந்த பொதுக்கூட்டம் இருக்கும்.
நேற்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். மும்பையில் மாநகராட்சி தேர்தலில் பாஜ ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருக்கிறது. மும்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த மஹாராஷ்டிராவிலும் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜ ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறது. இந்தியாவின் தெற்கில் எடுத்துக் கொண்டால், முதல்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் ஒரு மிகப்பெரிய அளவிலான வெற்றியை பாஜ பெற்றிருக்கிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் பிறந்த தினம் இன்று. இந்தப் பிறந்த தினத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் இபிஎஸ் ஐந்து வாக்குறுதிகளை தமிழக வாக்காளர்களுக்கு கொடுத்து இருக்கிறார். அதனை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதேபோல் இன்றைக்கு நமது மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி, தமிழகத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நாளும், நேரமும் குறிக்கப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் வருகைக்காக நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான வேலைகளை எல்லாம் நாங்கள் தொடங்கி செய்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
2 மாநகராட்சி கிடைத்தவுடன் தமிழகம் கிடைத்தது விடுமா
எல்லாம் சரி! டெல்லியில் மோடி கலந்து கொண்ட பொங்கல் விழாவில் பராசக்தி படக் குழுவினரை ஏன் அழைத்தீர்கள்?
நீங்கள் சொல்லுவது ஓடும் நீரில் எழுதி வைக்க வேண்டியது தான். தமிழகத்தில் காலூண்டுவது கடினம்.
BJP doesnt have the basic qualification for Tamilnadu Politics.
தமிழக எப்பன்களில்
நீ மூன் றாவது நபர்
ஜனநாயகம் படம் பற்றி சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் எதுவும் பேசாமல் இருப்பது எதை உறுதி செய்கிறது என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள்.
குடுபத்துக்கு எழுதி குடுத்திட்டோம்
தமிழகத்தில் தாமரை மலர்வது மிகவும் கடினம் அது அமிஷாவுக்கே தெரியும் மோடி ஜி அறிவால் இங்க திராவிட கட்சிகளுக்கு மக்களின் சமூக ஆதரவு உண்டு
உங்கள் கனவு பலிக்காது
தமிழக வாக்காளர்களில் புத்திசாலிகள் அதிகம் எல்.முருகன். தமிழ்நாட்டில் பாஜகவை சமாதியில் புதைத்து பல ஆண்டுகள் ஆகிறது.
எல்லா தமிழர்களையும் உன்னைப்போல அடிமை உப்பிகள் என நினைக்க வேண்டாம் பாலாஜி.. யார் புத்திசாலி என்பஹே மே 2026ல் உனக்கு தமிழகம் புரியவைக்கும்
பாவம் பாலாஜி...இவளோ நாள் கோமாவில் இருந்தாரு...திமுக படுதோல்வி அடையும்மேலும்
-
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர்
-
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? காடேஸ்வரா சுப்ரமணியம் கேள்வி
-
ஒராண்டில் 539 தாய்மார்கள் தாய்ப்பால் தானம்: 924 குழந்தைகள் நலம்!
-
அசாம் முன்னேற்றம் அடைவதை காங்கிரஸ் விரும்பவில்லை; பிரதமர் மோடி
-
வங்கதேசத்தில் மற்றொரு கொடூரம்; கார் ஏற்றி ஹிந்து தொழிலாளி கொலை!
-
யாரும் எந்த முட்டுக்கட்டையும் போடக் கூடாது; கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப் திட்டவட்டம்