ஜோதிபுரம் அரச மரத்தடி விநாயகர் கோயிலை அகற்ற எழுந்தது எதிர்ப்பு
மேட்டுப்பாளையம்: -: ஜோதிபுரம் அருகே மிகவும் பழமையான அரச மரத்துக்கு அடியில், அமைந்திருக்கும் பெரிய விநாயகர் கோயிலை நெடுஞ்சாலை துறையினர் அகற்றக் கூடாது என வலியுறுத்தி, கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள், ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் மத்திய இணை அமைச்சர் முருகனிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் ஜோதிபுரம் அருகே, கோவை -- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையோரம், தண்டு மாரியம்மன் மற்றும் பெரிய விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகின்றனர்.
சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக, அரச மரத்துக்கு அடியில் உள்ள பெரிய விநாயகர் கோயிலை அகற்ற, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் இது தொடர்பாக, நேற்று மத்திய இணை அமைச்சரிடம் மனு அளித்து வலியுறுத்தினர். மனுவில், 'கோயில், போக்குவரத்துக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்கிறது. பல ஆண்டுகளாக வழிபாடு செய்யும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கோயிலை அகற்றக்கூடாது' என கூறப்பட்டிருந்தது.----
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது