சேதமடைந்த தடுப்பு

கூடலுார்: கூடலுார் துப்புகுட்டிபேட்டை அருகே, காசிம்வயல் பகுதியில் இருந்து வரும் நீரோடை செல்ல, கோழிக்கோடு சாலை நடுவே பாலம் அமைத்துள்ளனர். பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் உள்ள தடுப்பு முற்றிலும் சேதமடைந்தது. தற்காலிக தடுப்பாக அமைந்திருந்த சிமென்ட் தடுப்புகளும் தற்போது சேதமடைந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் வாகனங்கள், அப்பகுதி வேகமாக கடந்து செல்கின்றன. பாலத்தின் ஓரத்தில் பாதுகாப்பு தடுப்புகள் இல்லாததால், வாகன விபத்துகள் அபாயம் உள்ளது. மேலும், அப்பகுதி மக்கள் கடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து, பாலத்தை ஒட்டி பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement