ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்கிழக்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
நேற்று காலை நிலவரப்படி, இலங்கைக்கு தென் கிழக்கில் 790 கி.மீ., ; சென்னைக்கு தென்கிழக்கில், 1,270 கி.மீ., தொலைவில் நிலவியது.
அடுத்த, 24 மணி நேரத்தில், இந்த அமைப்பு, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில், சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
ஜன., 10, 12ம் தேதிகளில், சென்னை, செங்கல்பட்டு உட்பட, கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது