காஞ்சியில் வரும் 10ல் ரேஷன் குறைதீர் முகாம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நாளை மறுதினம், ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் தாலுகாவில் குண்டுகுளம்; உத்திரமேரூர் தாலுகாவில் கடல்மங்கலம்; வாலாஜாபாத் தாலுகாவில் ஆர்ப்பாக்கம்; ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் சந்தவேலுார்; குன்றத்துார் தாலுகாவில் வழுதலம்பேடு ஆகிய கிராமங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 10:00 மணி அளவில் துவங்கும் கூட்டத்தில், துறை சார்ந்த ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், ரேஷன் கார்டுடன் மொபைல் எண் இணைப்பு ஆகியவை செய்யப்படும்.
மேலும், மூன்றாம் பாலினத்தவர், நரிக்குறவர், பழங்குடியினர் உள்ளிட்ட சமுதாயத்தினர் புதிய ரேஷன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது