தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்திய யானை
அந்தியூர்: அந்தியூர் அருகே நேற்று முன்தினம் இரவு, செலம்பூரம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, செக் போஸ்ட் அருகில் உள்ள தோட்டத்தில் புகுந்தது. அங்கு, கருப்புசாமி சேகர் என்பவரின் தோட்-டத்தில் சாகுபடி செய்துள்ள செவ்வாழை மரங்-களை தின்றும் முறித்தும் சேதப்படுத்தியது. அத-னருகில், தங்கராசு என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கரும்பு பயிர்களை தின்று சேதப்படுத்தியது.
இதேபோல், வெங்கிடு-சாமி தோட்டத்தில் பயிரிட்டிருந்த செவ்வாழை மரங்கள், சிவசாமி தோட்டத்தில் நெற்பயிர்களை காலால் மிதித்தும், சாப்பிட்டும் சேதப்படுத்தியுள்-ளது.
இதையடுத்து, அந்தியூர் பாரஸ்டர் ஈஸ்வர-மூர்த்தி தலைமையிலான வனத்
துறையினர், யானை சேதப்படுத்தியபகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது, விவசாய தோட்டத்திற்குள் யானை போகாமல் இருக்க நட-வடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்-தனர்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது