திருத்தணி அரசு கல்லுாரி விடுதியில் உணவு பற்றாக்குறை: மாணவர்கள் மனு
திருத்தணி: அரசு கல்லுாரி விடுதியில் உணவு பற்றாக்குறை என, கல்லுாரி மாணவர்கள் நேற்று ஆர்.டி.ஓ.,விடம் மனு அளித்தனர்.
திருத்தணி அரசு கலைக் கல்லுாரி அருகே, ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கல்லுாரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். நடப்பு கல்வியாண்டில், விடுதி மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்குவதில்லை என, மாணவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், 30க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள் நேற்று, திருத்தணி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு வந்து, ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ராமனிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
நடப்பு கல்வியாண்டில், 35 மாணவர்கள் தங்கி படித்து வருகிறோம். எங்களுக்கு உணவு சரியாக வழங்குவதில்லை. விடுதி காப்பாளரிடம் கேட்கும் போது, அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பயோ மெட்ரிக் கருவியில், 15 - 20 மாணவர் களின் கைரேகை மட்டும் தான் பதிவாகி உள்ளது.
அந்த மாணவர்களுக்கு வழங்கும் உணவுப்படியை கொண்டு உணவு தயாரித்து, பகிர்ந்து கொடுக்கிறோம் எனக் கூறுகிறார். போதிய உணவு கிடைக்காததால், எங்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, எங்களுக்கு முறையாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட நேர்முக உதவியாளர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது