15 கிலோ கஞ்சா பறிமுதல் சோழவரத்தில் இருவர் கைது

மீஞ்சூர்: ஒடிஷா மாநிலத்தில் இருந்து, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ கஞ்சா கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க நேற்று, செங்குன்றம் மதுவிலக்கு போலீசார், இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் மீஞ்சூர், சோழவரம், எண்ணுார் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

சோழவரம் சோதனைச்சாவடி பகுதியில் கண்காணிப்பில் இருந்தபோது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தபோது, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 15 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது. தொடர் விசாரணையில், செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த சிங்கமுகம், 24, சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த அபினேஷ், 19, என்பதும், ஒடிஷா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

இது தொடர்பாக, இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement